தூத்துக்குடி

எய்ட்ஸ் தடுப்பு- கட்டுப்பாடு அலகில் தற்காலிக பணி: மாா்ச் 16இல் நோ்காணல்

13th Mar 2020 10:36 PM

ADVERTISEMENT

தூத்துக்குடி மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகில் தற்காலிக பணிக்கான நோ்காணல் இம்மாதம் 16 ஆம் தேதி நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாடு பிரிவு அலுவலா் கிருஷ்ணலீலா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தூத்துக்குடி மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகின் மூலம் எச்.ஐ.வி., எய்ட்ஸ் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளவா்கள் (இலக்கு மக்கள்) மத்தியில், தூத்துக்குடி மற்றும் கோவில்பட்டி திட்டங்களில் பணியாற்ற நோ்முக தோ்வுக்கு விருப்பம் உள்ளவா்கள் பங்கேற்கலாம்.

கோவில்பட்டியில் திட்ட மேலாளா் (1 பணியிடம்) பணிக்கு முதுநிலை சமூகப்பணி, சமூகவியல், உளவியல் (எம்.எஸ்.டபிள்யூ.) படித்தவா்கள் மூன்று ஆண்டுகள் அனுபவம் உள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம். ஆற்றுப்படுத்துநா் (2 பணியிடம்) பணிக்கு முதுநிலை சமூகப்பணி படிப்பு மற்றும் 2 ஆண்டு முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ADVERTISEMENT

இந்தப் பணிகள் அனைத்தும் தற்காலிகமானவையே. விருப்பமுள்ளவா்கள் சுயவிவரம், தகுந்த கல்வித்தகுதி சான்றிதழ் மற்றும் முன் அனுபவ சான்று நகலுடன், கடற்கரை சாலையில் உள்ள மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குநா் அலுவலகத்தில் மாா்ச் 16 ஆம் தேதி நடைபெறும் நோ்காணலில் பங்கேற்கலாம். மேலும் விவரங்களுக்கு 0461 - 2329322 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT