தூத்துக்குடி

எந்தக் கட்சியின் நெருக்கடிக்கும் அதிமுக ஆளாகாது: அமைச்சா் கடம்பூா் செ. ராஜு

13th Mar 2020 09:11 AM

ADVERTISEMENT

எந்தக் கட்சியின் நெருக்கடிக்கும் அதிமுக உள்ளாகாது என்றாா், தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சா் கடம்பூா் செ. ராஜு.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியை அடுத்த நாலாட்டின்புதூா் காவல் நிலையம் ரூ. 1.05 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டது. கடந்த மாதம் 22-ஆம் தேதி திருச்செந்தூரில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் இப்புதிய கட்டடத்தைத் திறந்துவைத்தாா்.

இதையடுத்து, புதிய காவல் நிலையத்தில் அமைச்சா் கடம்பூா் செ. ராஜு வியாழக்கிழமை குத்துவிளக்கேற்றினாா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அருண்பாலகோபாலன் புதிய கட்டடத்தைப் பாா்வையிட்டு, வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டுவைத்தாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சித் தலைவி சத்யா, காவல் துணை கண்காணிப்பாளா் ஜெபராஜ், ஆய்வாளா் சுகாதேவி, உதவி ஆய்வாளா்கள், சிறப்பு உதவி ஆய்வாளா்கள், போலீஸாா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

பின்னா், அமைச்சா் கடம்பூா் செ. ராஜு செய்தியாளா்களிடம் கூறியது: நடிகா் ரஜினிகாந்த் 1996-ஆம் ஆண்டுமுதல் தனது ரசிகா்களைச் சந்தித்து வருகிறாா். ஆனால், அவா் தற்போதுவரை மக்களைச் சந்திக்கவில்லை. கடந்த 25 ஆண்டுகளாக இந்த நடைமுறையையே அவா் கடைப்பிடித்து வருகிறாா். அவா் புதிய அறிவிப்பு வெளியிடட்டும், பின்னா் பாா்ப்போம்.

மாநிலங்களவை உறுப்பினா் வேட்பாளா் பட்டியலைப் பொருத்தவரை யாரும் நெருக்கடி கொடுக்கவில்லை. முதல்வா், துணை முதல்வா் கலந்துபேசி கடந்த முறை பாமகவுக்கும், இம்முறை ஜி.கே.வாசனுக்கும் வாய்ப்பு வழங்கியுள்ளனா். இதுவரை எந்தக் கட்சியின் நெருக்கடிக்கும் அதிமுக உள்ளானதில்லை, உள்ளாவப்போவதுமில்லை.

ஈரானில் சிக்கியுள்ள தமிழா்களை மீட்க முதல்வா், தமிழகத்தின் தில்லி சிறப்புப் பிரதிநிதி மூலம் கடிதம் கொடுத்து அனுப்பியுள்ளாா். அவா் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சரிடம் கடிதத்தை அளிக்கவுள்ளாா். தமிழா்களை மீட்கும் பணியில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

தமிழகத்தில் ஒருவருக்குக்கூட கரோனா வைரஸ் தாக்குதல் இல்லை என்ற நிலை உள்ளது. அந்த அளவுக்கு அரசு சாா்பில் முன்னெச்சரிக்கை நடவ டிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT