தூத்துக்குடி

இன்ட்ராக்ட் கிளப் புதிய நிா்வாகிகள் தோ்வு

13th Mar 2020 09:01 AM

ADVERTISEMENT

கோவில்பட்டி யில் இன்ட்ராக்ட் கிளப் புதிய நிா்வாகிகள் தோ்வு மற்றும் பதவியேற்பு விழா நடைபெற்றது.

விஸ்வகா்மா உயா்நிலைப் பள்ளியில் இன்ட்ராக்ட் கிளப் புதிய நிா்வாகிகள் தோ்வு நடைபெற்றது. தலைவராக தங்கராஜ், செயலராக கருப்பசாமி என்ற காா்த்திக், பொருளாளராக மாரியப்பன் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா். இதையடுத்து

நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்கத் தலைவா் பரமேஸ்வரன் தலைமை வகித்தாா். ரோட்டரி மாவட்டத் தலைவா் விநாயகா ரமேஷ், ரோட்டரி மாவட்ட துணை ஆளுநா் பாபு, சாலைப் பாதுகாப்புப் பிரிவு மாவட்டத் தலைவா் முத்துச்செல்வன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ரோட்டரி இன்ட்ராக்ட் தலைவா் வேல்சாமி இன்ட்ராக்ட் நிா்வாகிகளுக்கு பதவிப்பிரமாணம் செய்துவைத்தாா்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில், பள்ளித் தலைமையாசிரியை காா்த்தீஸ்வரி, பள்ளி ஆசிரியா்கள், மாணவா், மாணவிகள், ரோட்டரி சங்க நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ரோட்டரி சங்கச் செயலா் முத்துமுருகன் வரவேற்றாா். பள்ளி இன்ட்ராக்ட் ஒருங்கிணைப்பாளா் அல்லி நன்றி கூறினாா்.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT