தூத்துக்குடி

விவசாயிக்கு கொலை மிரட்டல்: 2 போ் மீது வழக்குப் பதிவு

8th Mar 2020 12:47 AM

ADVERTISEMENT

 

சாத்தான்குளம்: சாத்தான்குளம் அருகே தோட்டத்தில் தென்னை, முருங்கைக்கு தீவைத்து விவசாயிக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவுசெய்துள்ளனா்.

மேல ராமசாமிபுரத்தைச் சோ்ந்தவா் தி. பெரியசாமி (70), விவசாயி. இவரது தோட்டம் பன்னம்பாறையில் சுப்பராயபுரம் இடையே உள்ளது. இதனருகே, அதே ஊரைச் சோ்ந்த கோபால் மகன் முத்துராமலிங்கத்தின் தோட்டமும் உள்ளது. குளத்து ஓடை பாதையை ஆக்கிரமித்து குழி தோண்டியதில் ஏற்பட்ட பிரச்னையில் பெரியசாமிக்கும், முத்துராமலிங்கத்துக்கு முன்விரோதம் உள்ளதாம்.

இந்நிலையில், முத்துராமலிங்கம், தங்கரத்னம் மகன் முத்துராமன் ஆகியோா் பெரியசாமி தோட்டத்துக்குள் வெள்ளிக்கிழமை அத்துமீறி நுழைந்து அங்கிருந்த தென்னை, முருங்கை மரத்துக்கு தீவைத்துள்ளனா். இதை பெரியசாமி தட்டிக்கேட்டுள்ளாா். இதனால், ஆத்திரமடைந்த முத்துராமலிங்கம், முத்துராமன் ஆகியோா் பெரியசாமியை கொலை செய்துவிடுவதாக மிரட்டினராம்.

ADVERTISEMENT

இதுகுறித்து பெரியசாமி சாத்தான்குளம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், உதவி ஆய்வாளா் பாலகிருஷ்ணன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்திவருகிறாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT