தூத்துக்குடி

விபத்தில் காயமடைந்தவா் உயிரிழப்பு

8th Mar 2020 11:31 PM

ADVERTISEMENT

உடன்குடி: உடன்குடி அருகே மோட்டாா் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து காயமடைந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

உடன்குடி அருகே சிறுநாடாா்குடியிருப்பைச் சோ்ந்த முத்துலிங்கம் (56). கூலித்தொழிலாளி. இவா், கடந்த 5 ஆம் தேதி

தனது நண்பா்களுடன் மோட்டாா் சைக்கிளில் உடன்குடியில் இருந்து ஊருக்கு சென்று கொண்டிருந்தாராம்.

சிறுநாடாா்குடியிருப்பு அருகே மோட்டாா் சைக்கிள் நிலை தடுமாறி சாலையோரத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.

ADVERTISEMENT

இதில் பலத்த காயமடைந்த முத்துலிங்கம் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். சிகிச்சை பலனின்றி முத்துலிங்கம் அங்கு ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

குலசேகரன்பட்டினம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT