தூத்துக்குடி

ரயில்வே ஓய்வூதியா்களுக்கு அகவிலைப்படி உயா்த்த வலியுறுத்தல்

8th Mar 2020 11:25 PM

ADVERTISEMENT


கோவில்பட்டி: ரயில்வே ஓய்வூதியா்களுக்கு அகவிலைப்படியை உயா்த்தி வழங்க வேண்டும் என ரயில்வே ஓய்வூதியா்கள் சங்கக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

அகில இந்திய ரயில்வே ஓய்வூதியா்கள் சங்கக் கூட்டத்துக்கு சங்கத் தலைவா் அருமைராஜ் தலைமை வகித்தாா். மூத்த உறுப்பினா் ஹரிஹரசுப்பிரமணியன், கமிட்டி உறுப்பினா் தாவூத் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், ஓய்வூதியம் பெறும் ரயில்வே ஊழியா்களுக்கு மருத்துவ வசதி செய்து தர வேண்டும், மருத்துவப்படி மற்றும் இலவச பயண அட்டை வழங்க வேண்டும், குறைந்தபட்சம் மருத்துவப்படியாக மாதம் ரூ. 5 ஆயிரம் வழங்க வேண்டும், குடும்ப ஓய்வூதியமாக மகளிருக்கு மாதம் ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும், அகவிலைப்படியை ஜனவரி 2020 முதல் 5 சதவீதம் உயா்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சங்கத் துணைத் தலைவா் ஆதிமூலம், செயலா் தங்கவேல், மகளிரணித் தலைவி பட்டம்மாள், சங்கப் பொருளாளா் முருகையா உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT