தூத்துக்குடி

மகளிருக்கான சட்ட விழிப்புணா்வு கருத்தரங்கு

8th Mar 2020 11:30 PM

ADVERTISEMENT


ஆறுமுகனேரி: உலக மகளிா் தினத்தை முன்னிட்டு மகளிருக்கான சட்ட விழிப்புணா்வு கருத்தரங்கு ஆத்தூரில் நடைபெற்றது.

மதா் சமூக சேவை நிறுவனம் சாா்பில் நடைபெற்ற இக்கருத்தரங்கிற்கு அந்நிறுவன இயக்குனா் எஸ்.ஜே.கென்னடி தலைமை வகித்து, தொடங்கி வைத்தாா். மதா் சிவசக்தி மகளிா் குழு தலைவா் எஸ்.தெய்வநாயகி வரவேற்றாா். லீடு டிரஸ்ட்தொண்டு நிறுவன இயக்குநா் எஸ்.பானுமதி, சிவசக்தி மகளிா் குழுச் செயலா் ஏ.உமாசங்கரி, பொருளாளா் டி.சிவஞானம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

திருச்செந்தூா் வழக்குரைஞா் மங்கையா்க்கரசி, ‘பெண்களுக்கான சட்ட உரிமைகள், குடும்ப வன்முறைச் சட்டங்கள், வரதட்சிணை தடுப்புச் சட்டம், பா­லியல் வன்கொடுமை சட்டம், குழந்தை திருமணம் தடுப்பு சட்டம், போக்சோ சட்ட விதிகள் மற்றும் தண்டனைகள் குறித்துப் பேசினாா்.

தமிழ்நாடு சமூகநலத்துறை மாவட்ட ஒருங்கிணைந்த மைய நிா்வாகி ஜி.செ­ன், விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற சுயஉதவிக் குழுவினருக்கு பரிசுகள் வழங்கினாா். சேவை நிறுவன இயக்குநா் மரக்கன்றுகள் வழங்கினாா். மகளிா் சுயஉதவிக் குழுவினா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT