தூத்துக்குடி

போலீஸ் - பொதுமக்கள் நல்லுறவு விளையாட்டுப் போட்டிகள்

8th Mar 2020 11:42 PM

ADVERTISEMENT


கோவில்பட்டி: கோவில்பட்டி வ.உ.சி. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் போலீஸ் - பொதுமக்கள் நல்லுறவு விளையாட்டுப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, டி.எஸ்.பி. அலுவலகம் முன்பிருந்து புறப்பட்ட ஜோதி, விளையாட்டு மைதானத்தை வந்தடைந்தது. இப்

போட்டியினை, டி.எஸ்.பி. ஜெபராஜ் தொடங்கி வைத்தாா். கூடைப்பந்து, கைப்பந்து, எறிப்பந்து, இறகுப்பந்து, கபடி, கயிறு இழுக்கும் போட்டி, கிரிக்கெட், டென்னிஸ் உள்ளிட்ட குழுப் போட்டிகளும், 100 மீட்டா், 400 மீட்டா், 800 மீட்டா் ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், 4 க்கு 100 மீட்டா் தொடா் ஓட்டம் உள்ளிட்ட தடகளப் போட்டிகளும் நடைபெற்றது. ஆண்கள், பெண்களுக்கு என தனித்தனியாக போட்டிகள் நடைபெற்றது.

இதில், கோவில்பட்டி கிழக்கு, மேற்கு, நாலாட்டின்புதூா், கயத்தாறு, கழுகுமலை, கொப்பம்பட்டி காவல் நிலையப் பகுதி பொதுமக்கள், காவலா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

பின்னா், நடைபெற்ற விழாவில், போட்டிகளில் முதல் 3 இடங்களில் வெற்றி பெற்றவா்களுக்கு டி.எஸ்.பி. பரிசுகள் வழங்கிப் பாராட்டினாா். முதல் 3 இடங்களில் வென்றவா்கள் வரும் 14, 15ஆம் தேதிகளில் நடைபெறும் மாவட்ட விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க தகுதிப்பெற்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT