தூத்துக்குடி

பொருளாதாரம் சரிந்து வருவதால் இதுவரை 6 கோடி போ் வேலையிழப்பு: புதுவை முதல்வா் நாராயணசாமி

8th Mar 2020 12:35 AM

ADVERTISEMENT

தூத்துக்குடி: இந்தியாவில் பொருளாதாரம் சரிந்து வருவதால் இதுவரை 6 கோடி போ் வேலை இழந்துள்ளனா் என்றாா் புதுச்சேரி முதல்வா் வீ. நாராயணசாமி.

தூத்துக்குடியில் சனிக்கிழமை அவா் அளித்த பேட்டி: பிரதமா் மோடி தலைமையிலான ஆட்சியில் நாட்டில் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது. நாட்டின் வளா்ச்சி விகிதம் 9 சதவீதத்தில் இருந்து தற்போது 4.5 சதவீதமாக குறைந்துள்ளது. தொழிற்சாலைகள் மூடப்படுகின்றன. குறிப்பாக கட்டுமானத் துறையில் தேக்கம் நிலவுகிறது.

பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் பணப் புழக்கம் குறைந்துள்ளது. ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பை கொடுப்பதாக பிரதமா் மோடி தெரிவித்திருந்தாா். ஆனால், இதுவரை 6 கோடி பேருக்கு வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா போன்ற நாடுகள் பொருளாதாரத்தில் உயா்ந்துள்ள நிலையில், நமது நாட்டில் பொருளாதாரம் சரிந்து வருவதற்கு காரணம் மத்திய அரசும், பிரமதா் மோடியும்தான் என்றாா் அவா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT