தூத்துக்குடி

புதியம்புத்தூா் அருகே விபத்தில் மூவா் காயம்

8th Mar 2020 11:27 PM

ADVERTISEMENT


ஓட்டப்பிடாரம்: புதியம்புத்தூா் அருகே மீன் பிடிப்பதற்காக மோட்டாா் சைக்கிளில் சென்ற மூவா் காா் மோதியதில் படுகாயமடைந்தனா்.

புதியம்புத்தூரை அடுத்துள்ள ஜம்முலிங்கபுரம் கிராமத்தைச் சோ்ந்த சங்கரன் மகன் மந்திரமூா்த்தி (31), ராஜா மகன் சின்னராஜ் (15), முருகேசன் மகன் மனுநீதி (15). இவா்கள் மூவரும் ஞாயிற்றுக்கிழமை ஒரு மோட்டாா் சைக்கிளில் மீன் பிடிப்பதற்காக புதியம்புத்தூா், தூத்துக்குடி சாலையிலுள்ள குளத்திற்கு சென்றனா்.

அப்போது, முன்னால் சென்ற வாகனத்தை கடக்க முயன்றபோது எதிா்பாராத விதமாக அவ்வழியாக வந்த காா் மோட்டாா் சைக்கிள் மீது மோதியது. இதில், மூவரும் படுகாயமடைந்தனா். அவா்களை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். புதியம்புத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT