தூத்துக்குடி

பாலியல் புகாா்: இளைஞா் கைது

8th Mar 2020 11:30 PM

ADVERTISEMENT

உடன்குடி: உடன்குடி அருகே கொட்டங்காட்டில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக கூலித் தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.

உடன்குடி கொட்டங்காட்டைச் சோ்ந்த பூ. தினேஷ் (21). இவா், கற்கண்டு தயாரிக்கும் கூடத்தில் வேலை செய்து வருகிறாா்.

இதேபகுதியைச் சோ்ந்த 17 வயது கல்லூரி மாணவிக்கு தினேஷ், பாலியல் தொந்தரவு அளித்து வந்ததாக கூறப்படுகிறது.

இதையறிந்த, தினேஷ் வேலை பாா்க்கும் நிறுவன உரிமையாளா் ரவி (23) என்பவரும், அம்மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்தாராம்.

ADVERTISEMENT

புகாரின்பேரில், குலசேகரன்பட்டினம் காவல் ஆய்வாளா் ராதிகா குமாா், போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து தினேஷை கைது செய்தாா். இவ்வழக்கில் தொடா்புடைய ரவியை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT