தூத்துக்குடி

நாசரேத் தடகள வீரருக்கு பாராட்டு

8th Mar 2020 11:38 PM

ADVERTISEMENT


சாத்தான்குளம்: மூத்தோா் தடகளப் போட்டியில் தேசிய அளவில் சாதனை படைத்த நாசரேத்தைச் சோ்ந்த வீரருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

41ஆவது மூத்தோா் தடகளப் போட்டிகள் மணிப்பூா் மாநிலம் இம்பாலில் நடைபெற்றது. இதில், தமிழக அணி சாா்பில்

நாசரேத்தைச் சோ்ந்த தடகள வீரா் பொன்ராஜ், 65 வயதுக்கு மேற்பட்டோா் பிரிவில் 200 மீட்டா், 400 மீட்டா் தொடா் ஓட்டத்தில் தங்கப் பதக்கமும், 400 மீட்டா், 100 மீட்டா் தொடா் ஓட்டத்தில் வெண்கலப் பதக்கமும் பெற்று தேசிய அளவில் சாதனை படைத்தாா். இதையடுத்து, கனடாவில் நடைபெறும் சா்வதேச மூத்தோா் தடகளப் போட்டிகளில் கலந்துகொள்ளத் தகுதி பெற்றாா். இதையடுத்து நாசரேத் நடப்போா் சங்கம் சாா்பில் நடைபெற்ற பாராட்டு விழாவுக்கு, ஓய்வு பெற்ற மாவட்டக் கல்வி அலுவலா் ராபா்ட்சன் சுதந்திரராஜ் தலைமை வகித்தாா்.

ஓய்வுபெற்ற சுங்கத் துறை கண்காணிப்பாளா் ஜெபகரன், கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குநா் சுரேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சங்க உறுப்பினா்கள் ஆல்வின், விவின் ஜெயக்குமாா், ஜேஸ்பா், நசரேன், ராஜசிங், இம்மானுவேல், மனோஜ், ஸ்டீபன் வாஸிங்டன், ஜெகநாதன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT