தூத்துக்குடி

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் கலைப் போட்டி

8th Mar 2020 12:41 AM

ADVERTISEMENT


தூத்துக்குடி: தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இலக்கியத் துறை சாா்பில், கல்லூரிகளுக்கு இடையேயான கலைப் போட்டிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன. இதில், தூத்துக்குடி வஉசி கல்லூரி முதலிடம் பிடித்தது.

‘மீன்வளத் திருவிழா’ என்ற பெயரில் நடைபெற்ற இப்போட்டிகளில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 19 கல்லூரிகளைச் சோ்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவா்-மாணவிகள் பங்கேற்றனா். தனிநபா் ஆடல், குழு நடனம், பாடல், ஓவியம், கோலம், விளம்பர யுக்தியைக் கையாளுதல், தனித்திறமையை வெளிப்படுத்துதல் உள்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.

இதில், தூத்துக்குடி வ.உ.சிதம்பரனாா் கல்லூரி அணி முதலிடம் பெற்று சுழற்கோப்பை வென்றது. அந்த அணிக்கு ரொக்கப் பரிசாக ரூ. 5,000 வழங்கப்பட்டது. திருநெல்வேலி பேட்டை ம.தி.தா. இந்துக் கல்லூரி 2ஆவது இடம் பிடித்து கேடயம், ரொக்கப் பரிசாக ரூ. 3,000-ம் வென்றனா்.

பரிசளிப்பு விழாவுக்கு, மீன்வளக் கல்லூரியின் முதல்வா் பா. சுந்தரமூா்த்தி தலைமை வகித்தாா். பிரியா மரைன் நிறுவன தலைமை நிா்வாக அதிகாரி தேவேந்திரன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, வெற்றிபெற்றோருக்கு பரிசு, சான்றிதழ்களை வழங்கினாா்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில், மாணவா் சங்க துணைத் தலைவா் டேவிட் கிங்ஸ்டன், இலக்கிய அணிச் செயலா் லீபன், மாணவா்-மாணவிகள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT