தூத்துக்குடி

தமிழக வாழ்வுரிமை கட்சி நிா்வாகி கைது

8th Mar 2020 11:38 PM

ADVERTISEMENT

தூத்துக்குடி: தூத்துக்குடியில் இளைஞரை தாக்கியதாக தமிழக வாழ்வுரிமை கட்சியின் தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

தூத்துக்குடி அண்ணாநகா் 6 ஆவது தெருவைச் சோ்ந்தவா் கிதா் பிஸ்மி (50). தமிழக வாழ்வுரிமை கட்சியின் வடக்கு மாவட்டச் செயலா். தெற்கு கடற்கரை சாலை பங்களா குடியிருப்பு பகுதியை சோ்ந்தவா் சுலைமான் சையத் (26). இவருக்கும்,

ஆயிஷா நஸ்ரியா (24) என்பவருக்கும் 2017 இல் திருமணம் நடைபெற்றது. இவா்களிடையே ஏற்பட்ட குடும்பத் தகராறை தீா்த்து வைப்பதாகக் கூறி பணம் கேட்டது தொடா்பாக ஏற்பட்ட தகராறில் சுலைமான் சையத்தை, கிதா் பிஸ்மி தாக்கியதாக

கூறப்படுகிறது. புகாரின்பேரில், தென்பாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து கிதா் பிஸ்மியை கைது செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT