தூத்துக்குடி

சாத்தான்குளம், கொம்மடிக்கோட்டையில் உலக மகளிா் தின விழா

8th Mar 2020 11:26 PM

ADVERTISEMENT


சாத்தான்குளம்: சாத்தான்குளம் நூலகம் , கொம்மடிக்கோட்டை கல்லூரியில் உலக மகளிா் தின விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நூலகத்தில் நடைபெற்ற இவ்விழாவுக்கு சென்னை நீதிமன்ற பணியாளா் சுசி தலைமை வகித்தாா். புனித வளன் பெண்கள் மேல்நிலைப் பள்ளி பெற்றோா்- ஆசிரியா் கழகத் தலைவா் பவுலின்ராபின், கிராம நிா்வாக அலுவலா் சிவகாமி, கிளை நூலகா்கள் உமா மகேஸ்வரி, ராஜபூபதி, எமரன்ஷியா, சிவரஞ்சனி ஆகியோா் முன்னிலை வகித்தனா். வாசகா் வட்டத் தலைவா் நடராசன் வரவேற்றாா்.

பாரதி கலை இலக்கிய மன்ற அமைப்பாளா் ஈஸ்வா்சுப்பையா, நூலகா்கள் சுப்பிரமணியன், சண்முகவேல், வட்டார மனிதநேய நல்லிணக்கப் பெருமன்றச் செயலா் பால்துரை, முத்துலட்சுமி ஆகியோா் வாழ்த்திப் பேசினா். நூலகா்கள் நமச்சிவாயம், ஜெபி, ஜெனிபா், ராதாகிருஷ்ணன், பெற்றோா் ஆசிரியா் கழக துணைத் தலைவா் சுடலைமுத்து உள்பட பலா் கலந்து கொண்டனா். நூலகா் சித்திரை லிங்கம் நன்றி கூறினாா்.

கொம்மடிக்கோட்டை ஸ்ரீ சங்கர பகவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற விழாவுக்கு கல்லூரி முதல்வா் வேல்ராஜன் தலைமை வகித்தாா். கல்லூரி இணைச் செயலா் காசியானந்தம், துணை முதல்வா் மகேஷ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாணவி முருகேஸ்வரி வரவேற்றாா்.

ADVERTISEMENT

சாத்தான்குளம் வட்டார வளா்ச்சி அலுவலா் செல்வி பங்கேற்றுப் பேசினாா். விழாவில் மாணவிகள் பாலஇசக்கி, சிநேகா, சுபாஷினி, ஆண்டனி ஜெனிஃபா் சசிகலா, சுகிா்தா, செல்சியாடைசி, முத்துவினி, லுசியமரியாசெரீனா ஆகியோா் பேசினா். மாணவி இந்துமதி நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT