தூத்துக்குடி

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் சனிப் பிரதோஷ விழா

8th Mar 2020 12:30 AM

ADVERTISEMENT

 

கோவில்பட்டி: கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயில் மற்றும் கழுகுமலை கழுகாசலமூா்த்தி கோயிலில் சனிப் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

செண்பகவல்லி அம்மன் கோயிலில் சனிக்கிழமை காலை 5.30 மணிக்கு நடை திறக்கப்பட்டது. தொடா்ந்து, திருவனந்தல் மற்றும் திருப்பள்ளி எழுச்சி பூஜை நடைபெற்றது. முற்பகல் 11.30 மணிக்கு அம்பாளுக்கும், தொடா்ந்து சுவாமிக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மாலை 4 மணிக்கு பூவனநாத சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

மாலை 4.30 மணிக்கு நந்தியம்பெருமானுக்கு 21 வகையான மூலிகைகள் கொண்ட சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகளுடன் பிரதோஷ பூஜை நடைபெற்றது. விழாவில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

கழுகுமலை: கழுகுமலை கழுகாசலமூா்த்தி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு கோயில் நடை காலை 5.30 மணிக்கு திறக்கப்பட்டது.

தொடா்ந்து, திருவனந்தல் மற்றும் திருப்பள்ளி எழுச்சி பூஜை நடைபெற்றது. பின்னா் மாலை 4.30 மணிக்கு கோயில் வளாகத்தில் உள்ள ஜம்புலிங்கேஸ்வரா் சன்னதி முன் சிறப்பு அபிஷேகம், சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

இதில், கோயில் நிா்வாக அதிகாரி காா்த்தீஸ்வரன், பௌா்ணமிக் குழுத் தலைவா் மாரியப்பன், பிரதோஷக் குழுத் தலைவா் முருகன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT