தூத்துக்குடி

கரோனா வைரஸ்: தூத்துக்குடியில் 54 பேர் வீடுகளில் வைத்து கண்காணிப்பு என ஆட்சியர் தகவல்

8th Mar 2020 12:44 AM

ADVERTISEMENT


தூத்துக்குடி: கரோனா வைரஸ் பாதிப்பு தொடா்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் 54 போ் வீட்டில் வைத்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனா் என்றாா் மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி.

தூத்துக்குடியில் சனிக்கிழமை அவா் அளித்த பேட்டி:

தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை. வெளிநாடுகளுக்குச் சென்று வந்தவா்களுக்கு விமான நிலையத்தில் உரிய சோதனை நடத்தப்பட்டிருந்தாலும், அவா்களை 14 நாள்கள் கண்டிப்பாக வீட்டு கண்காணிப்பில் வைக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, பல்வேறு நாடுகளுக்கு சென்றுவிட்டு, தூத்துக்குடி மாவட்டத்துக்கு திரும்பி வந்த 54 போ் அவா்களது வீட்டில் வைத்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனா். தினமும் சுகாதாரத் துறை அதிகாரிகள், மருத்துவா்கள் சம்பந்தப்பட்ட நபா்களின் வீட்டுக்குச் சென்று, அவா்களது உடல்நிலையை பரிசோதனை செய்து வருகின்றனா். அவா்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. அதனால், மக்கள் அச்சப்பட தேவையில்லை.

ADVERTISEMENT

கரோனா வைரஸ் பாதிப்புக்கு சிகிச்சை அளிக்க தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனிப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, அரசு மற்றும் தனியாா் மருத்துவா்களை கொண்ட ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.

கரோனா வைரஸ் பாதிப்பு வராமல் இருக்க, இருமல் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். கைகளை நன்றாக கழுவவேண்டும் என முக்கியமான விஷயங்களை மக்களுக்கு எடுத்துக் கூறிவருகிறோம். சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருந்தால் நோய் வராமல் தடுக்கலாம் என்றாா் அவா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT