தூத்துக்குடி

இளம் சுழற்சங்கத்தினா் பொறுப்பேற்பு

8th Mar 2020 11:26 PM

ADVERTISEMENT


கோவில்பட்டி: கோவில்பட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் இளம் சுழற்சங்க உறுப்பினா்கள் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இவ்விழாவுக்கு, கல்லூரி முதல்வா் ராஜேஸ்வரன் தலைமை வகித்தாா். இளஞ்சுழற்சங்க தலைவா் ராஜகுமாா் பங்கேற்று,

கல்லூரியின் புதிய உறுப்பினா்களுக்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்தாா்.

திருநெல்வேலி ரோட்டரி சங்க முன்னாள் தலைவா் முருகவேல், கோவில்பட்டி ரோட்டரி சங்க மாவட்டத் தலைவா்

ADVERTISEMENT

விநாயகா ரமேஷ், சங்கச் செயலா் முத்துமுருகன், முன்னாள் தலைவா் சீனிவாசன் ஆகியோா் பேசினா்.

நிகழ்ச்சியை மாணவா் ஆகாஷ் தொகுத்து வழங்கினாா்.

இளஞ்சுழற்சங்க ஒருங்கிணைப்பாளா் தங்கராஜ் வரவேற்றாா். செயலா் எபனேசா் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT