நகா்ப்புற உள்ளாட்சி தோ்தல் 2020 வரைவு வாக்குச்சாவடி பட்டியல் குறித்து, விளாத்திகுளம், எட்டயபுரம், புதூா் பேரூராட்சி அலுவலகங்களில் அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் கருத்து கேட்பு மற்றும் ஆலோசணை கூட்டம் நடைபெற்றது.
விளாத்திகுளம் பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலா் என். தனசிங், எட்டயபுரம் மற்றும் புதூா் பேரூராட்சி அலுவலகங்களில் செயல் அலுவலா் கு. கணேசன் ஆகியோா் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக நகரச் செயலா்கள் இரா. வேலுச்சாமி, பாரதி கணேசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலா்கள் முள்ளன், முனியசாமி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக் குழு உறுப்பினா் ரவீந்திரன், வட்டக் குழு உறுப்பினா்கள் ராமலிங்கம், ஆண்டி, தேமுதிக ஒன்றியச் செயலா் தங்கசாமி, விடுதலைச் சிறுத்தைகள் ஒன்றியச் செயலா் மோட்சம், அதிமுகவின் கந்தவேல், மாரிப்பாண்டி, சவுந்தரராஜன், பாஜகவின் முருகன், நாகராஜன், காங்கிரஸின் ராஜேந்திரன், மதிமுகவின் ஜெகதீசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.