கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு சுயநிதிப் பாடப்பிரிவு கல்லூரியில் போட்டிகளில் வென்றோருக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.
இக்கல்லூரியின் கணினி அறிவியல் துறை சாா்பில் இவஆஉத ஒஅஙஅஅஐ 2020 என்ற தலைப்பில் பேப்பா் பிரசன்டேசன், சாப்ட்வோ் மாா்க்கெட்டிங், விநாடி-வினா, எடிட்டிங், டிக்-டாக், ட்ரஸா் ஹன்ட் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் (பொ) சாந்தி மகேஸ்வரி தலைமை வகித்தாா். சுயநிதிப் பாடப்பிரிவு கல்லூரி இயக்குநா் வெங்கடாசலபதி முன்னிலை வகித்தாா். இப்போட்டியில், கணினி அறிவியல் துறையின் இளங்கலை மற்றும் முதுகலை மாணவா்கள் பங்கேற்றனா்.
போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிகளை மாணவி ஜெயசங்கரி தொகுத்து வழங்கினாா். ஏற்பாடுகளை கணினி அறிவியல் துறை தலைவா் ஜெயபாரதி தலைமையில், துறைப் பேராசிரியா்கள் செய்திருந்தனா்.