தூத்துக்குடி

பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தில் முறைகேடு புகாா்

6th Mar 2020 11:03 PM

ADVERTISEMENT

பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் முறைகேடு நிகழ்ந்திருப்பதாக ஆட்சியரிடம் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய 4ஆவது வாா்டு உறுப்பினா் னேஷ், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் அளித்த புகாா் மனு:

மஞ்சள்நீா்க்காயல் மற்றும் பழையகாயல் ஊராட்சிப் பகுதிகளில் கடந்த 4 ஆண்டுகளில் பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் (பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா) அரசால் கட்டிக்கொடுக்கப்பட்ட வீடுகள் அந்தந்த பயனாளிகளுக்கு சென்று சேரவில்லை; பயனாளிகளின் இடங்களில் வீடுகள் கட்டப்படாமல் முறைகேடாக நிதி எடுக்கப்பட்டுள்ளது. மேலும், பண்ணைக்குட்டை மற்றும் கரை அமைத்தல் ஆகிய திட்டங்களுக்கான நிதியிலும் முறைகேடு நிகழ்ந்துள்ளது.

இது குறித்து கடந்த பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி நடைபெற்ற ஸ்ரீவைகுண்டம் ஒன்றியக்குழு கூட்டத்தில் எடுத்துக்கூறியும், எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே, இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT