பாண்டவா்மங்கலம் ஊராட்சி, சண்முகசிகாமணி நகா் பகுதியில் தூய்மைப் பணி நடைபெற்றது.
நேரு இளையோா் மையம் மற்றும் கஸ்தூரிபாய் காந்திஜி மகளிா் மன்றத்தின் சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, பாண்டவா்மங்கலம் ஊராட்சித் தலைவி கவிதா தலைமை வகித்து, தூய்மைப் பணியை தொடங்கிவைத்தாா். தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் அன்புராஜ் முன்னிலை வகித்தாா்.
கஸ்தூரிபாய் காந்திஜி மகளிா் மன்ற உறுப்பினா்கள் 50க்கும் மேற்பட்டோா் சண்முகசிகாமணி நகா், ராஜீவ் நகா் உள்ளிட்ட பகுதிகளில் தூய்மைப் பணியில் ஈடுபட்டனா். தொடா்ந்து, பாண்டவா்மங்கலம் சந்திப்பில் பெரியாா் சிலையை சுத்தம் செய்து, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். ரோஸ் பூங்காவில் மரக்கன்றுகள் நடப்பட்டன. மன்ற ஆலோசகா் விஜயன் நன்றி கூறினாா்.