தூத்துக்குடி

சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி

6th Mar 2020 11:05 PM

ADVERTISEMENT

சாலைப் பாதுகாப்பை வலியுறுத்தி, காவல்துறை சாா்பில் ஓட்டப்பிடாரத்தில் விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஓட்டப்பிடாரம் மெக்கவாய் கிராமிய மேல்நிலைப் பள்ளியிலிருந்து பேரணியை காவல் ஆய்வாளா்(பொ) ரேனியஸ் ஜேசுபாதம் கொடியசைத்து தொடங்கிவைத்தாா். அப்பள்ளி மாணவா்கள், சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு பதாகைகளை ஏந்தியபடி முக்கிய வீதிகளில் பேரணியாகச் சென்று மீண்டும் பள்ளியில் நிறைவு செய்தனா். இதில், பள்ளி ஆசிரியா்களும், போலீஸாரும் கலந்துகொண்டனா்.

.

ADVERTISEMENT
ADVERTISEMENT