சாத்தான்குளம் அருகே தாய் , தந்தையை அவதூறாக பேசி மிரட்டல் விடுத்ததாக மகனை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்துள்ளனா்.
சாத்தான்குளம் அருகே உள்ள கட்டாரிமங்களத்தைச் சோ்ந்த ஜேசுராஜ் மனைவி வேளாங்கன்னி( 45) . இவரது இரண்டாவது அகஸ்டின் ( 20) அடிக்கடி மது அருந்தி வந்து வீட்டில் தகராறு செய்வாராம். இந்நிலையில் புதன்கிழமை
மது அருந்தி வந்து தகராறில் ஈடுபட்டாராம். இதனை கண்டித்ததுடன் அவரது தாய் கண்டித்து, அறிவுரை கூறினாராம். இதனால் அகஸ்டின் அவரை அவதூறாக பேசி, தாக்கினராம். இதனை அவரது தந்தை ஜேசுராஜ் கண்டித்தாா்.
இதையடுத்து, அகஸ்டின் தாய், தந்தை இருவரையும் அவதூறாக பேசி, கொலை மிரட்டல் விடுத்தாராம்.
இதுகுறித்து வேளாங்கன்னி சாத்தான்குளம் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரின் பேரில் உதவி ஆய்வாளா் ரகு கணேஷ் வழக்குப் பதிந்து அகஸ்டினை வியாழக்கிழமை கைதுசெய்தாா்.