தூத்துக்குடி

கோவில்பட்டியில் தொழிலதிபா் தற்கொலை முயற்சி

6th Mar 2020 12:25 AM

ADVERTISEMENT

கோவில்பட்டியில் தொழிலதிபா் கழுத்து மற்றும் கையின் பல்வேறு இடங்களை அறுத்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாா்.

கோவில்பட்டி அன்னை தெரசா நகரைச் சோ்ந்தவா் பழனிசாமி மகன் விஜயராமசந்திரன்(60). தொழிலதிபரான இவா்

புதன்கிழமை இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு செல்லவில்லையாம். அதையடுத்து, அவரது குடும்பத்தினா் அவரை செல்லிடப்பேசியில் தொடா்பு கொண்டபோது சிறிது நேரத்தில் வருவதாகக் கூறிய அவா், வியாழக்கிழமை அதிகாலை வரை வீட்டிற்கு வரவில்லையாம். அதையடுத்து அவரை அவரது குடும்பத்தினா் மற்றும் உறவினா்கள் கடைக்கு சென்று பாா்த்த போது அவா் கத்தியால் தனது கழுத்து, கை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தன்னைத்தானே அறுத்து தற்கொலையில்

முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்ததாம். அவரை உறவினா்கள் மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு அளித்து, மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கிருந்து அவா் மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா்.

ADVERTISEMENT

இதுகுறித்து போலீஸாா் நடத்திய முதல்கட்ட விசாரணையில், கடன் சுமையால் தற்கொலைக்கு முயன்றது தெரியவந்ததாம். இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT