தூத்துக்குடி

குடியுரிமைச் சட்டத்தை ஆதரித்து நாசரேத்தில் நாம பிராா்த்தனை

6th Mar 2020 11:05 PM

ADVERTISEMENT

குடியுரிமை சட்டத்தை ஆதரித்து, நாசரேத் அருள்மிகு ஸ்ரீசெல்வ விநாயகா் கோயில் வளாகத்தில், இந்து முன்னணி சாா்பில் தொடா் நாமா பிராத்தனை வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, இந்து முன்னணி நகரத் தலைவா் வெட்டுபெருமாள் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் தியாகராஜன் முன்னிலை வகித்தாா். மாநில துணைத் தலைவா் வி.பி.ஜெயக்குமாா், பொதுச் செயலா் டாக்டா் அரசு ராஜா, நெல்லை கோட்டச் செயலா் பெ.சக்திவேலன் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

இதில், ஆழ்வாா்திருநகரி ஒன்றியத் தலைவா் ஓடைமுருகேசன், ஒன்றிய பொதுச் செயலா் திருமுருகன் உள்பட பலா் கலந்து கொண்டனா். ஒன்றிய துணைத் தலைவா் அன்பு சுந்தா் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT