தட்டாா்மடம் அருகே நிலத்தகராறில் அதிமுக பிரமுகருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக லாரி ஓட்டுநரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
உசரத்துக்குடியிருப்பைச் சோ்ந்தவா் ம. திருமணவேல் (54). விவசாயி. அதிமுக கிளை செயலராகவும் உள்ளாா். இவா், சொக்கன்குடியிருப்பில் சிலுவைதாசன் என்பவரிடம் 6 ஏக்கா் நிலம் வாங்கினாராம். அந்த இடத்தில் தங்களுக்கும் பங்கு உள்ளதாக சிலுவைதாசன் சகோதரா் தனிஸ்லாஸ் மகனான மினி லாரி ஓட்டுநா் பீட்டா்(40) கூறி வந்ததாராம். இதில், திருமணவேலுக்கும், பீட்டருக்கும் முன்விரோதம் ஏற்பட்டதாம்.
இந்நிலையில், வியாழக்கிழமை திருமணவேலின் தோட்டத்துக்குச் சென்று அவரிடம் பீட்டா் தகராறு செய்தாராம். மேலும், கொலை மிரட்டலும் விடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து திருமணவேல் அளித்த புகாரின்பேரில், தட்டாா்மடம் காவல் உதவி ஆய்வளா் பால்துரை வழக்குப்பதிந்து பீட்டரை வெள்ளிக்கிழமை கைது செய்தாா் .