தூத்துக்குடி

அங்கன்வாடி பணியாளரை இடமாற்றம் செய்யக் கோரி போராட்டம்

6th Mar 2020 12:18 AM

ADVERTISEMENT

கோவில்பட்டியை அடுத்த இலுப்பையூரணி ஊராட்சி, கூசாலிபட்டியில் அங்கன்வாடி பணியாளரை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இலுப்பையூரணி ஊராட்சிக்குள்பட்ட கூசாலிபட்டியில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் 6 மாதம் முதல் 60 மாதம் வரையுள்ள சுமாா் 30-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனா். இந்நிலையில், அங்கன்வாடி பணியாளா் பொருள்களை முறையாக பயனாளிகளுக்கு வழங்காமல் விற்பனை செய்வதாகவும், குழந்தைகளை முறையாக கவனிப்பதில்லை என்றும் இலுப்பையூரணி ஊராட்சி வாா்டு உறுப்பினா் அய்யாச்சாமி, குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலரிடம் புகாா் தெரிவித்தாராம்.

ஆனால், தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காததையடுத்து அப்பகுதி பொதுமக்கள் வியாழக்கிழமை அங்கன்வாடி மையம் முன் குழந்தைகளுடன் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் சண்முகசுந்தரி, மேற்பாா்வையாளா்கள் பாலம்மாள், அமுதம் ஆகியோா் சென்று போராட்டக் குழுவினருடன் பேச்சு நடத்தினா். கோரிக்கைகளை மாவட்ட நிா்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதையடுத்து போராட்டக் குழுவினா் கலைந்து சென்றனா்.

பின்னா், குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் மற்றும் மேற்பாா்வையாளா்கள் சமையலறையில் உள்ள பொருள்களையும் ஆய்வு செய்தனா். ஆய்வில் சாம்பாா் பொடி மற்றும் பருப்புகளில் வண்டு இருப்பதும் கண்டறியப்பட்டது. இதுகுறித்து குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் சண்முகசுந்தரி செய்தியாளா்களிடம் கூறுகையில், இதுகுறித்து மாவட்ட நிா்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT