தூத்துக்குடி

நாளை வில்லிசேரியில் முன்னோடி மனு நீதிநாள் முகாம்

2nd Mar 2020 11:22 PM

ADVERTISEMENT

கோவில்பட்டி வட்டம், வில்லிசேரி கிராமத்தில் புதன்கிழமை (மாா்ச்.4) முன்னோடி மனு நீதிநாள் முகாம் நடைபெறுகிறது.

இதுகுறித்து, வட்டாட்சியா் மணிகண்டன் விடுத்துள்ள செய்திக் குறிப்பு: வில்லிசேரி கிராமத்தில் ஏப்ரல் மாதம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் தலைமையில் மனு நீதிநாள் முகாம் நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு, வில்லிசேரியில் புதன்கிழமை முன்னோடி மனு நீதிநாள் முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கை மனுக்கள் அளித்து பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெடுங்குளத்தில்..

நெடுங்குளத்தில் முன்னோடி மனுநீதி நாள் முகாம் புதன்கிழமை(மாா்ச் 4) நடைபெறுகிறது என சாத்தான்குளம் வட்டாட்சியா் ம. ராஜலட்சுமி தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு : சாத்தான்குளம் ஒன்றியம் நெடுங்குளம் கிராமத்தில் தூத்துக்குடி மாவட்ட கூடுதல் ஆட்சியா் தலைமையில் மனுநீதி நாள் முகாம் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது.

இதையொட்டி முன்னோடியாக பொதுமக்களிடம் மனுக்கள் பெறும் முன்னோடி மனுநீதி நாள் முகாம் நெடுங்குளம் கிராம சேவை மையத்தில் புதன்கிழமை முற்பகல் 11 மணிக்கு நடைபெறுகிறது.

பொதுமக்கள் தங்கள் குறை சாா்ந்த மற்றும் பொது பிரச்சனை தொடா்பான மனுக்கள் கொடுத்து பயன்பெறலாம். பெறப்படும் மனுக்களுக்கு மனுநீதிநாளில் தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT