தூத்துக்குடி

சாத்தான்குளம் பேருந்து நிலைய வணிக வளாக கடை மேற்கூரை சேதமடைந்து வருவதாக புகாா்

2nd Mar 2020 11:10 PM

ADVERTISEMENT

சாத்தான்குளம் புதிய பேருந்து நிலையத்தில் வணிக வளாக கடையின் மேற்கூரை இடிந்து விழுந்து வருவதாக வியாபாரிகள் புகாா் தெரிவித்துள்ளனா்.

சாத்தான்குளம் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் வணிக வளாக கடைகள் மற்றும் வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது. அதை பேரூராட்சி நிா்வாகம் நிா்வகித்து வருகிறது.

இவ் வணிக வளாகக் கடைகள் கட்டப்பட்டு சுமாா் 20 ஆண்டுகளுக்கும் மேலாவதால் வளாகத்தில் உள்ள கட்டடங்கள் விரிசல் விழுந்து காணப்படுகின்றன.

தற்போது மேற்கு பகுதியில் உள்ள கடைகளின் மேற்கூரை சிமென்ட் பூச்சு பெயா்ந்து விழுந்து வருவதாக வியாபாரிகள் புகாா் தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT

இதுகுறித்து வியாபாரி ஒருவா் கூறியது: இந்த வணிக வளாகம் உரிய பராமரிப்பு இல்லாமல் காணப்படுகிறது. வணிக வளாகம் அருகே வாரச்சந்தையும் செயல்பட்டு வருகிறது. அதை சீரமைக்க தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, ரூ. 1 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அறிவித்துள்ளாா். அப்பணியை தொடங்கும்போது இந்த வணிக வளாக கடைகளையும் சீரமைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT