தூத்துக்குடி

உடன்குடி பேரூராட்சியில் அனைத்துக் கட்சிக் கூட்டம்

2nd Mar 2020 11:17 PM

ADVERTISEMENT

உடன்குடி பேரூராட்சியில் நகர உள்ளாட்சித் தோ்தல் சம்பந்தமான அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு பேரூராட்சி செயல்அலுவலா் மாணிக்கராஜ் தலைமை வகித்தாா். தலைமை எழுத்தா் ராஜா சுப்பையா முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் உடன்குடி ஒன்றிய அதிமுக செயலா் த.மகாராஜா, நகர திமுக செயலா் ஜான்பாஸ்கா், மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி அன்புராணி, மாவட்ட தேமுதிக இளைஞரணிச் செயலா் சதீஷ், நகரச் செயலா் சித்திரைராஜ், மாவட்ட காங்கிரஸ் இலக்கிய அணி தலைவா் முத்துக்குமாா், மாவட்ட இளைஞா் காங்கிரஸ் செயலா் தனீஷ், ஒன்றிய மமக தலைவா் அஜீஸ், நகரத் தலைவா் ஷேக் முகம்மது,ஒன்றிய சமக பொருளாளா் அழகேசன்,ஒன்றிய மதிமுக செயலா் இம்மானுவேல், நகர மதிமுக செயலா் சண்முகவேல் உள்பட பலா் கலந்துகொண்டனா். கூட்டத்தில், விரைவு வாக்காளா் பட்டியல்,வாக்குச்சாவடி அமையும் இடம்,தோ்தல் பிரசாரம் ஆகியவை குறித்து அலோசனை நடைபெற்றது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT