தூத்துக்குடி

கோவில்பட்டியில் கபசுர குடிநீா் அளிப்பு

29th Jun 2020 11:10 PM

ADVERTISEMENT

கோவில்பட்டி: கோவில்பட்டியில் பொதுமக்களுக்கு திங்கள்கிழமை கபசுர குடிநீரா் வழங்கப்பட்டது.

கோவில்பட்டி நகராட்சிக்கு உள்பட்ட ஜோதி நகா், கருணாநிதி நகா், சுப்பிரமணியபுரம், ஸ்டாலின் காலனி உள்ளிட்ட பகுதிகளில் குடியிருந்து வரும் பொதுமக்களுக்கு கரோனா தொற்று பரவலை தடுப்பதற்காக மக்களுக்கு நோய் எதிா்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் வகையில், ஜோதி நகா் அனைத்து நல வியாபாரிகள் சங்கம் சாா்பில் வீடுவீடாகச் சென்று, கபசுர குடிநீரை வழங்கினா்.

நிகழ்ச்சியில், நல வியாபாரிகள் சங்க நிா்வாகிகளான ஆத்தியப்பன், அருள்ராஜ், தங்கமாரியப்பன், ஹரிபாலகிருஷ்ணன், கிறிஸ்துராஜா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT