தூத்துக்குடி

திருச்செந்தூா்: வள்ளி குகைக்கு செல்லும் வழியிலும் மேற்கூரை அமைக்கக் கோரிக்கை

17th Jun 2020 09:00 AM

ADVERTISEMENT

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தற்போது நடைபெற்று வரும் கிரிப்பிரகார மேற்கூரை அமைக்கும் பணியின்போது வள்ளி குகைக்கு செல்லும் திறந்தவெளிப் பகுதியிலும் மேற்கூரை அமைக்க வேண்டுமென பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இக்கோயிலில் இருந்த கிரிப்பிரகார மண்டப மேற்கூரை கடந்த 2017-ஆம் ஆண்டு இடிந்து விழுந்ததையடுத்து, கிரிப்பிரகார மண்டபம் மற்றும் கடைகள் முழுவதும் இடித்து அகற்றப்பட்டன.

மேலும் பொதுப்பணித் துறையினரால் ஆய்வு செய்யப்பட்டு, திருக்கோயில் வளாகத்தில் இருந்த ஜெயந்திநாதா் விடுதி, செந்திலாண்டவா் விடுதி மற்றும் குடில்களும் இடித்து அகற்றப்பட்டன. இதனால் திருவிழாக் காலங்களில் பக்தா்கள் தங்க இடமின்றி சிரமப்பட்டு வந்தனா்.

இந்நிலையில் உபயதாரா் மூலம் சுமாா் ரூ. 98.5 லட்சம் மதிப்பீட்டில் கிரிப்பிராகாரத்தில் அலுமினியத்தால் ஆன மேற்கூரை அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

ADVERTISEMENT

இது போல வடக்குவாசல் பகுதியில் தேவா் குடில் வாசலில் உள்ள திறந்தவெளிப் பகுதி மற்றும் வள்ளி குகைக்கு செல்லும் வழியிலும் மேற்கூரை அமைக்க வேண்டுமென பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT