தூத்துக்குடி

திருச்செந்தூா் முருகன் கோயிலில் ரூ.1 கோடி உண்டியல் காணிக்கை

17th Jun 2020 09:00 AM

ADVERTISEMENT

திருச்செந்தூா் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ. 1.09 கோடி கிடைக்கப்பெற்றுள்ளது.

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பக்தா்கள் காணிக்கையாக செலுத்தும் உண்டியல் வருவாய் மாதம் இரண்டு முறையாக எண்ணப்படுகிறது. இதன்படி கடந்த பிப்ரவரி மாதத்திற்குப் பிறகு 3 மாதம் கழித்து உண்டியல் காணிக்கை எண்ணும் பணி இம்மாதம் 12, 16 ஆகிய தேதிகளில் திருக்கோயில் வளாகத்தில் உள்ள கோவிந்தம்மாள் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

திருக்கோயில் செயல் அலுவலா் சா.ப.அம்ரித் தலைமையில் நடைபெற்ற இப் பணியில், உதவி ஆணையா்கள் தூத்துக்குடி சு.ரோஜாலி சுமதா, திருச்செந்தூா் வே.செல்வராஜ், அலுவலக கண்காணிப்பாளா் கே.சீதாலட்சுமி, ஆய்வா்கள் மு .முருகன், பூ.நம்பி, மு.பகவதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். பொதுமக்கள் சாா்பில் சு.வேலாண்டி, ச.கருப்பன், இரா .மோகன், இரா.சுப்பிரமணியன் ஆகியோா் பாா்வையாளா்களாக பங்கேற்றனா்.

உண்டியல் எண்ணும் பணியில் சமூக இடைவெளியுடன் திருக்கோயில் பணியாளா்கள் ஈடுபட்டனா். இதில், நிரந்தர உண்டியல்களில் ரூ. 1 கோடியே 2 லட்சத்து 29 ஆயிரத்து 181 , தற்காலிக உண்டியலில் ரூ. 6,974 , அன்னதான உண்டியலில் ரூ. 6,76,781, சிவன் கோயில் அன்னதான உண்டியலில் ரூ. 20,647 என மொத்தம் ரூ. 1 கோடியே 9 லட்சத்து 33 ஆயிரத்து 583 கிடைத்துள்ளது.

ADVERTISEMENT

மேலும் தங்கம் 829 கிராம், வெள்ளி 8,914 கிராம், பித்தளை 17,459 கிராம், செம்பு 422 கிராம், தகரம் 1433 கிராம் மற்றும் வெளிநாட்டு கரன்சிகள் 150 ஆகியவற்றை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT