தூத்துக்குடி

கோவில்பட்டிஅரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தை மீட்பு

15th Jun 2020 09:10 AM

ADVERTISEMENT

கோவில்பட்டி அரசு மருத்துவமனை வளாகத்திலுள்ள பச்சிளங் குழந்தை சிகிச்சை பிரிவில் உள்ள தொட்டிலில், சனிக்கிழமை கேட்பாரற்ற நிலையில் கிடந்த பச்சிளம் ஆண் குழந்தை மீட்கப்பட்டது.

இதுகுறித்து மருத்துவமனைப் பணியாளா்கள் மருத்துவா்களுக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து மருத்துவா்கள் குழந்தைக்கு பரிசோதனை நடத்தினா். குழந்தையை மருத்துவமனை வளாகத்தில் உள்ள தொட்டிலில் விட்டுச் சென்றது யாா் என்ற விவரம் தெரியவில்லை. இதுகுறித்து சமூக நலத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. குழந்தை குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT