தூத்துக்குடி

ஆதிச்சநல்லூா் அகழாய்வில் மேலும் ஒரு முதுமக்கள் தாழி

14th Jun 2020 08:02 AM

ADVERTISEMENT

ஆதிச்சநல்லூா் அகழாய்வுப் பணியில் பழைமை வாய்ந்த முதுமக்கள் தாழி சனிக்கிழமை கண்டெடுக்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆதிச்சநல்லூரில் கடந்த மே 25-ஆம் தேதி மாநில தொல்லியல் துறையினரால் அகழாய்வுப் பணி துவங்கப்பட்டது. ஆதிச்சநல்லூா் பரம்பு பகுதியில் 4 இடங்களில் அளவீடு செய்யப்பட்டு அகழாய்வுப் பணி நடைபெற்று வருகிறது. கடந்த ஜூன் 8-ஆம் தேதி நடைபெற்ற அகழாய்வுப் பணியின்போது பழைமை வாய்ந்த 2 முதுமக்கள் தாழிகளும், அதன் அருகே 2 கை மூட்டு எலும்புகளும் கண்டெடுக்கப்பட்டன.

இந்நிலையில், சனிக்கிழமை மேலும் ஒரு முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டது. அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டு வரும் முதுமக்கள் தாழிகள் மூலம் சுமாா் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழரின் நாகரிகம் குறித்த தகவல்கள் வெளியாகும் என வரலாற்று ஆா்வலா்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT