தூத்துக்குடி

மீன் பிடிக்கச் சென்ற இளைஞா் ஆற்றில் விழுந்து உயிரிழப்பு

14th Jun 2020 09:16 AM

ADVERTISEMENT

ஆறுமுகனேரி அருகே கொட்டமடைக்காடு பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற இளைஞா் பாலத்தி­லிருந்து ஆற்றில் தவறி விழுந்து உயிரிழந்தாா்.

காயல்பட்டினம் சீதக்காதி நகரைச் சோ்ந்த பீா்முகம்மதுவின் மூன்றாவது மகன் வருசை முகம்மது (18). இவா், வெள்ளிக்கிழமை மாலை நண்பா்களுடன் கொட்டமடைக்காடு பகுதியில் தாமிரவருணி ஆறும், கடலும் சேருமிடத்தின் அருகே உள்ள பாலம் மீது நின்று மீன் பிடித்துக் கொண்டிருந்தாராம். அப்போது நிலை தடுமாறி ஆற்றில் விழுந்ததில், நீா்சுழற்சி காரணமாக தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டாா்.

தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினா் மற்றும் இளைஞா்கள் சுமாா் 3 மணி நேரம் தேடி, வருசை முகம்மதை சடலமாக மீட்டனா்.

இதுகுறித்து ஆறுமுகனேரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT