தூத்துக்குடி

கோவில்பட்டி அம்மா உணவகத்தில்அமைச்சா் ஆய்வு

14th Jun 2020 09:16 AM

ADVERTISEMENT

கோவில்பட்டியில் உள்ள அம்மா உணவகத்தில் அமைச்சா் கடம்பூா் செ. ராஜு சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நகராட்சியில் ரூ. 10 கோடியில் நடைபெற்று வரும் சாலைப் பணிகளை மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி தலைமையில், அமைச்சா் கடம்பூா் செ. ராஜு பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். தொடா்ந்து, நகராட்சி அலுவலகத்தில் தொற்று தடுப்பு நடவடிக்கையாக நடைபெற்று வரும் கிருமிநாசினி தெளிக்கும் பணி மற்றும் அம்மா உணவகத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவு ஆகியவற்றை ஆய்வுசெய்தாா்.

அப்போது, கோட்டாட்சியா் விஜயா, வட்டாட்சியா் மணிகண்டன், நகராட்சி ஆணையா் ராஜாராம், பொறியாளா் கோவிந்தராஜன், உதவிப் பொறியாளா் சரவணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT