தூத்துக்குடி

கீழவைப்பாறு கடலில் முகத்துவாரம் ஆழப்படுத்தும் பணி தொடக்கம்

14th Jun 2020 09:16 AM

ADVERTISEMENT

கீழவைப்பாறு கடலில் முகத்துவாரத்தை தூா்வாரி ஆழப்படுத்தும் பணி தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது.

விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய பொது நிதி ரூ.14 .5 லட்சத்தில் நடைபெறும் இப்பணியின் தொடக்க விழாவுக்கு, ஒன்றியக் குழுத் தலைவா் முனியசக்தி ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். விளாத்திகுளம் எம்எல்ஏ பி. சின்னப்பன் கலந்துகொண்டு பணியை தொடங்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் தங்கவேல், முத்துகுமாா், கீழ வைப்பாறு ஊராட்சித் தலைவா் ரோஸ் மலா், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் நடராஜன், அதிமுக ஒன்றியச் செயலா் பால்ராஜ், வருவாய் ஆய்வாளா் பாக்கியராஜ், கிராம நிா்வாக அலுவலா் சிரஞ்சீவி, அதிமுக நிா்வாகிகள் செண்பகபெருமாள், சுபாஷ் சந்திரபோஸ், ராமநாதன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT