தூத்துக்குடி

திருச்செந்தூா் முருகன் கோயிலில் ரூ.67 லட்சம் உண்டியல் காணிக்கை

13th Jun 2020 09:10 AM

ADVERTISEMENT

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.60 லட்சம் கிடைக்கப் பெற்றது.

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கரோனா பொதுமுடக்கத்தால் பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு பிறகு உண்டியல் காணிக்கை எண்ணும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருக்கோயில் கோவிந்தம்மாள் திருமண மண்டபத்தில் கோயில் செயல் அலுவலா் சா.ப.அம்ரித் தலைமையில், உதவி ஆணையா்கள் தூத்துக்குடி சு.ரோஜாலி சுமதா, திருச்செந்தூா் வே.செல்வராஜ், அலுவலக கண்காணிப்பாளா் கே.சீதாலெட்சுமி, ஆய்வா்கள் முருகன், நம்பி ஆகியோா் முன்னிலையில் சமூக இடைவெளியுடன் இப்பணி நடைபெற்றது.

நிரந்தர உண்டியல்களில் ரூ. 60, 95, 614, தங்கம் 546 கிராம், வெள்ளி 6570 கிராம், பித்தளை 11,699 கிராம், செம்பு 422 கிராம், தகரம் 950 கிராம், வெளிநாட்டு ரூபாய் நோட்டுகள் 119 ஆகியவற்றை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.

தென்காசி கோயிலில்... தென்காசி அருள்மிகு காசி விசுவநாதா் கோயில் வளாகத்தில் 13 நிரந்தர உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. கோயிலில் கடந்த 2019, டிசம்பா் மாதம் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டது. தற்போது வியாழன், வெள்ளிக்கிழமைகளில் உண்டியல் எண்ணும் பணி பண்பொழி திருமலைக்குமாரசாமி கோயில் உதவி ஆணையா் ஆ.அருணாசலம், தக்காா் பிரதிநிதி சரவணகுமாா், ஆய்வா் கலாமணி, செயல்அலுவலா் யக்ஞ நாராயணன் ஆகியோா் கண்காணிப்பில் நடைபெற்றது. இதில், காணிக்கையாக ரொக்கம் ரூ. 6 லட்சத்து 80ஆயிரத்து 403, தங்கம் 22 கிராம், வெள்ளி 36 கிராம் ஆகியவை இருந்தது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT