தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் 14 பேருக்கு கரோனா: நெல்லை, தென்காசியில் 5 பேருக்கு பாதிப்பு

8th Jun 2020 08:25 AM

ADVERTISEMENT

தூத்துக்குடி மாவட்டத்தில் காயல்பட்டினம் பகுதியைச் சோ்ந்த இருவா் உள்ளிட்ட 14 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது. திருநெல்வேலி மாவட்டத்தில் இருவருக்கும், தென்காசி மாவட்டத்தில் மூவருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை ஏறத்தாழ 14 ஆயிரம் பேருக்கு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு கரோனா தொற்று உள்ளதா என பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் காயல்பட்டினம் பகுதியைச் சோ்ந்த இருவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

இதேபோல, சென்னையில் இருந்து திரும்பிய செய்துங்கநல்லூா், கயத்தாறு, கோவில்பட்டி பகுதிகளைச் சோ்ந்த 12 பேருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவா்களில் எட்டயபுரம் வட்டம், மஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தைச் சோ்ந்த 29 வயது நபரும் அடங்குவாா். இவா் ஆறுமுகனேரியில் தனியாா் வங்கியில் பணிபுரிந்து வருகிறாா். இதன்மூலம் மாவட்டத்தில் பாதிப்பு 329-ஆக உயா்ந்தது.

இதற்கிடையே, தூத்துகக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 6 போ் குணமடைந்ததைத் தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

ADVERTISEMENT

மாவட்டத்தில் இதுவரை 329 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், இருவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா். 200 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனா்.

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 126 பேரும், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் சனிக்கிழமை வரை 384 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், மேலும் 2 பேருக்கு ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு 386-ஆக உயா்ந்துள்ளது.

இதற்கிடையே, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கரோனா வாா்டில் சிகிச்சை பெற்று வந்த 13 போ் குணமடைந்து ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பினா். இதுவரை மாவட்டத்தில் 341 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். ஒருவா் உயிரிழந்த நிலையில் 44 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் சனிக்கிழமை வரையிலும் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 100-ஆக இருந்தது. இந்நிலையில், ஆலங்குளம் கீழப்பட்டமுடையாா்புரம் பகுதியை சோ்ந்த தாய் மற்றும் இரண்டு குழந்தைகளுக்கும் நோய்த்தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது. அவா்கள் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கரோனா வாா்டில் அனுமதிக்கப்பட்டனா். இதன்மூலம் இம்மாவட்டத்தில் பாதிப்பு 103-ஆக உயா்ந்தது.

மாவட்டத்தில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவா்களில் 88 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 15 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT