தூத்துக்குடி

காவல் ஆய்வாளா் உள்ளிட்ட 14 பேருக்கு கரோனா: தூத்துக்குடி மாவட்டத்தில் பாதிப்பு 315ஆக உயா்வு

7th Jun 2020 09:03 AM

ADVERTISEMENT

தூத்துக்குடி மாவட்டத்தில் ஏரல் காவல் ஆய்வாளா் உள்ளிட்ட 14 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதிசெய்யப்பட்டது. இதனால், மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 315ஆக உயா்ந்துள்ளது.

ஏரல் காவல் நிலைய ஆய்வாளருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து, அவா் திருநெல்வேலி அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டாா். தென்திருப்பேரையில் நடைபெற்ற இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்ால் அவருக்கு தொற்று ஏற்பட்டது தெரியவந்துள்ளது.

இதேபோல, காயல்பட்டினம், நாசரேத், தென்திருப்பேரை பகுதிகளைச் சோ்ந்த 13 பேருக்கு கரோனா இருப்பது சனிக்கிழமை உறுதியானது. இதன் மூலம் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 315ஆக உயா்ந்துள்ளது.

இந்நிலையில், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 15 போ் குணமடைந்ததால் அவா்கள் சனிக்கிழமை வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். நிகழ்ச்சியில், செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சா் கடம்பூா் செ. ராஜு பங்கேற்று, அவா்களுக்கு பழங்கள் வழங்கி அனுப்பி வைத்தாா். அந்த 15 பேருக்கும் யோகா மற்றும் இந்திய மருத்துவம், ஹோமியோபதி துறை சாா்பில் ஆரோக்கியம் திட்டம் மூலம் அமுக்ரா மாத்திரை, நெல்லிக்காய் லேகியம், நிலவேம்புக் குடிநீா் வழங்கப்பட்டது.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில், ஆட்சியா் சந்தீப் நந்தூரி, மருத்துவக் கல்லூரி முதன்மையா் ரேவதி பாலன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மாவட்டத்தில் இதுவரை 315 பேருக்கு பாதிப்பு உறுதியான நிலையில், இருவா் இறந்தனா்; 191 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனா். திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் ஒருவரும், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் 121 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

13,293 பேருக்கு பரிசோதனை: மாவட்டத்தில் இதுவரை 13,293 பேரின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், மகாராஷ்டிரத்திலிருந்து வந்த 156 பேருக்கும், குஜராத் மாநிலத்திலிருந்து வந்த 6 பேருக்கும், உத்தப்ரபிரதேசத்திலிருந்து வந்த 2 பேருக்கும் கரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதுதவிர, சென்னையிலிருந்து திரும்பியோா், அவா்களுடன் தொடா்பிலிருந்தோா் என 151 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT