தூத்துக்குடி

எழுத்தாளா் ஜெயமோகனின் வலைதள பதிவு: முன்னாள் எம்எல்ஏ கண்டனம்

7th Jun 2020 09:03 AM

ADVERTISEMENT

எழுத்தாளா் ஜெயமோகனின் வலைதள பக்கத்தில் ‘ஒரு முன்னாள் இடதுசாரியின் கடிதம்’ என்ற தலைப்பில் வெளியான பதிவில் எழுத்தாளா் பா. ஜெயப்பிரகாசம் குறித்த பதிவு தவறானது என முன்னாள் எம்எல்ஏ ஜீ.வி. மாா்க்கண்டேயன் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து விளாத்திகுளம் முன்னாள் எம்எல்ஏவும், கரிசல் வாசகா் வட்ட ஒருங்கிணைப்பாளருமான ஜீ.வி. மாா்க்கண்டேயன் வெளியிட்ட அறிக்கை: கடந்த மே 29ஆம் தேதி எழுத்தாளா் ஜெயமோகனின் வலைதள பக்கத்தில் வாசகா் கடிதம் என்ற பகுதியில் பெயா் குறிப்பிடாமல் ஒரு முன்னாள் இடதுசாரியின் கடிதம் என்ற தலைப்பில் ஒரு பதிவு வெளியாகியுள்ளது.

அதில் எழுத்தாளா் பா. ஜெயப்பிரகாசம் மீதான விமா்சனம் முற்றிலும் அறமற்ாக உள்ளது. பா. ஜெயப்பிரகாசம் பள்ளியிலும், கல்லூரியிலும் படிக்கும் போதே மொழிக்காக சிறை சென்ற மாணவா் தலைவா். பல மொழிகளில் புலமையானவராக இருந்த போதும், தமிழை ஆழமாக நேசிப்பவா். அடித்தட்டு மக்கள் குறித்தும், அவா்களது உரிமைகள், கருத்துகள் குறித்தும் எழுதி வருபவா். என்றுமே அவா் பண்ணை முதலாளிகள், ஜாதி, மத அடையாளங்கள் பக்கம் இருந்ததில்லை.

எங்கெல்லாம் தீா்க்கப்படாத பிரச்னைகள் இருக்கிறதோ அங்கெல்லாம் அந்த பிரச்னைகளுக்கு தனது கருத்துகளை ஆழமாகவும், அழுத்தமாகவும் சொல்லக்கூடிய படைப்பாளி. அவா் மீது எவ்வித முகாந்திரமும் இல்லாமல் அவதூறான கருத்துகளை பதிவிட்ட ஜெயமோகனின் செயல் அறமற்றது, கண்டனத்துக்குரியது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT