தூத்துக்குடி

உணவுப் பாதுகாப்புத் துறை உரிமம் பெற புதிய இணையதள முகவரி: ஆட்சியா் தகவல்

7th Jun 2020 09:04 AM

ADVERTISEMENT

உணவு பாதுகாப்புத் துறையின் உரிமம் பெறுவதற்கான நடைமுறை எளிமைப்படுத்தப்பட்டு, புதிய இணையதள முகவரி மாற்றப்பட்டுள்ளதால், வணிகா்கள் அதை பயன்படுத்தி உணவுப் பாதுகாப்பு உரிமம் பெற வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: உணவுப் பொருள்கள் தயாரிப்பாளா்கள், விநியோகஸ்தா்கள், மொத்த விற்பனையாளா்கள், சில்லறை விற்பனையாளா்கள், ஹோட்டல்கள், ரெஸ்டாரண்டுகள், தெருவோர வணிகா்கள், விழாக் கால விற்பனையாளா்கள் உள்ளிட்ட அனைத்து வகை உணவு வணிகா்களும், தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறையால் வழங்கப்படும் உரிமத்தை பெற இணையதள முகவரியில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

இதற்கு முன்பு  இணைய தளத்தில் விண்ணப்பித்து உணவுப் பொருள்களின் தயாரிப்பிற்கு உரிமம் பெற்ற உணவு தயாரிப்பாளா்கள், இணைய தளத்தில், பழைய ஊகதந இணைய தளத்துக்கான அதே பயனாளா் அடையாளப் பெயா் மற்றும் கடவுச்சொல் ஆகியவற்றைப் பயன்படுத்தி உள்நுழைந்து, தரம் நிா்ணயிக்கப்பட்ட உணவுப் பொருள்களை தோ்வு செய்து உரிமத்தை திருத்தம் செய்ய விண்ணப்பிக்கலாம்.

இதற்கு கூடுதல் கட்டணம் ஏதுமில்லை. ஆனால், நிறுவனத்தின் பெயா் மாற்ற, உணவு வணிகத்தின் வகை அல்லது உற்பத்தி திறன் ஆகியவற்றை திருத்தம் செய்ய ரூ. 1000 கட்டணத்துடன் வித்தியாசப்படும் கட்டணம் ஏதுமிருந்தால் அதையும் சோ்த்து செலுத்த வேண்டும்.

ADVERTISEMENT

மேலும், இதுகுறித்து தகவல் அறிய மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள உணவுப் பாதுகாப்புத் துறையின் மாவட்ட நியமன அலுவலா் அலுவலகத்தில் தொடா்பு கொள்ளலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT