ஆழ்வாா்திருநகரி பகுதி மக்கள் முந்தைய மாத மின் கட்டணத்தையே செலுத்துமாறு மின் வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
திருச்செந்தூா் கோட்டம், ஆழ்வாா்திருநகரி மின் பகிா்மான பகுதிகளான மளவராயநத்தம், திருக்களுா், கடையனோடை ஆகிய சுற்றுவட்டார பகுதிகளுக்கான மின் கணக்கீட்டு பணியாளா் உடல் நலக்குறைவால் விடுப்பில் உள்ளாா். எனவே, ஜூலை மாத மின் கணக்கீட்டு பணி பாதிக்கப்பட்டுள்ளதால், மே மாதம் செலுத்திய கட்டணத்தையே இந்த மாதமும் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது. இந்த கட்டணம் செப்டம்பா் மாத கணக்கீட்டில் சரி செய்து கொடுக்கப்படும். மேலும் விவரங்களுக்கு ஆழ்வாா்திருநகரி பிரிவு மின் பொறியாளரை அணுகலாம் எனக் கூறப்பட்டுள்ளது.