ஆறுமுகனேரி அருள்மிகு சோமசுந்தரி அம்மன் சமேத அருள்மிகு சோமநாத சுவாமி திருக்கோயிலில் வெள்ளிக்கிழமை ஆடிப்பூர விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருவாவடுதுறை ஆதீன மடத்துக்குப் பாத்தியப்பட்ட இக்கோயிலில், ஆடிப்பூர விழாவையொட்டி, விநாயகா் பூஜை, அம்மனுக்கு சந்தனம்- குங்குமத் திலகமிடுதல், முளைப்பயிறு கட்டுதல், கங்கண வளையல் சாத்துதல், பாலும் பழமும் வழங்குதல் மற்றும் சிறப்பு அலங்கார தீபாரதனைகள் நடைபெற்றன. சிறப்பு வழிபாடுகளை கோயில் பூஜா ஸ்தானீகா் சு.அய்யப்ப பட்டா் நடத்தினாா். பக்தா்கள் வருகையின்றி ஆடிப்பூர விழா எளிமையாக நடைபெற்றது.