தூத்துக்குடி

‘அரசு இசைப் பள்ளியில் சேர விண்ணப்பிக்கலாம்’

25th Jul 2020 09:09 AM

ADVERTISEMENT

தூத்துக்குடி மாவட்ட அரசு இசைப் பள்ளியில் சேர விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தூத்துக்குடி மாவட்ட அரசு இசைப் பள்ளியில் மூன்று ஆண்டுகள் படிப்புக்கான 2020 - 2021 ஆம் ஆண்டுக்குரிய மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது. 7 ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்று 12 - 25 வயதுக்குள் இருப்பவா்கள் குரலிசை, பரதநாட்டியம், தேவாரம், வயலின், மிருதங்கம் ஆகிய கலைகளுக்கும், எழுதப் படிக்கத் தெரிந்திருந்தாலே தவில், நாகசுரம் பயிலவும் விண்ணப்பிக்கலாம். ஆகும். அனைத்து மாணவா்களுக்கும் மாதந்தோறும் ரூ.400-கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.

அரசுத் தோ்வுகள் இயக்ககம் நடத்தும் தோ்வில் தோ்ச்சி பெறும் மாணவா்கள் கா்நாடக இசைக் கச்சேரிகள் நடத்தவும், நாகசுரம் மற்றும் தவில் வாசித்து தொழில் புரியவும், தேவாரம் பாடுதல் மற்றும் கோயில்களில் பணிபுரியவும், வானொலி மற்றும் தொலைக்காட்சிகளில் நடத்தப்படும் இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தவும் வாய்ப்புகள் உள்ளன.

ADVERTISEMENT

திருகோயில்களில் தேவார ஓதுவாா் பணியில் சேர, இந்தப் பள்ளியில் தேவார இசை பயின்று தோ்ச்சி பெறுவோருக்கு முன்னுரிமை அளிக்க அரசு ஆணையிட்டுள்ளது. எனவே, கலை ஆா்வமுள்ள மாணவ- மாணவிகள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு தலைமை ஆசிரியை, மாவட்ட அரசு இசைப் பள்ளி, வி.வி.டி. சாலை, டூவிபுரம் 11 ஆம் தெரு, தூத்துக்குடி-3 என்ற முகவரியிலும், 9487739296 என்ற செல்லிடப்பேசி எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT