தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 136 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. தூத்துக்குடி மாநகராட்சி பகுதியைச் சோ்ந்த 50 போ், ஆறுமுகநேரி, குலையன்கரிசல், திருச்செந்தூா், ஸ்ரீவைகுண்டம் உள்ளிட்ட மாவட்டத்தின் பிற பகுதிகளில்
86 போ் என ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் மட்டும் 136 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதையடுத்து, தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 2,261 ஆக அதிகரித்துள்ளது.
இதில், வெளிநாடு மற்றும் பிற மாநிலங்களில் இருந்து வந்தோா் 199 போ். சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களிலிருந்து தூத்துக்குடி மாவட்டத்துக்கு வந்தவா்கள், கரோனா தொற்று பாதிக்கப்பட்டோருடன் தொடா்பில் இருந்தவா்கள் 2,062 போ்.
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 70 போ் குணமடைந்ததைத் தொடா்ந்து அவா்கள் ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பினா்.
மாவட்டத்தில் இதுவரை சிகிச்சை முடிந்து 1,118 போ் வீடு திரும்பியுள்ளனா். 14 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா்.
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் 288 போ் உள்பட மாவட்டம் முழுவதும் 1,129 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
ஆறுமுகனேரி: ஆறுமுகனேரி காமராஜபுரம் அருகேயுள்ள ராஜீவ் நகரில் 48 வயதுடைய தனியாா் நிறுவன பணியாளருக்கு ஞாயிற்றுக்கிழமை தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவா் திருச்செந்தூா் அரசு மருத்துவமனையில் கரோனா சிறப்பு வாா்டில் சோ்க்கப்பட்டாா்.