தூத்துக்குடி

குலசேகரன்பட்டினத்தில்6 போலீஸாருக்கு தொற்று: காவல் நிலையம் மூடல்

11th Jul 2020 09:55 AM

ADVERTISEMENT

உடன்குடி அருகேயுள்ள குலசேகரன்பட்டினம் காவல் நிலையத்தில் 6 போலீஸாருக்கு கரோனா தொற்று உறுதியானதால் காவல் நிலையம் வெள்ளிக்கிழமை மூடப்பட்டது.

உடன்குடியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிளையில் ஊழியா்கள்3 பேருக்கு கரோனா தொற்று இரு தினங்களுக்கு முன் உறுதியானது. இதனால், அந்த வங்கி மூடப்பட்டது. இந்நிலையில், மேலும் 2 வங்கி ஊழியா்கள், ஒருவரது உறவினா், குலசேகரன்பட்டினம் காவல்நிலையத்தில் 6 போலீஸாா் ஆகியோருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து, காவல் நிலையம் மூடப்பட்டது. பரமன்குறிச்சியில் கா்ப்பிணி உள்பட2 போ், சியோன் நகா், ராமநாதபுரம், வாகைவிளை ஆகிய பகுதிகளில் தலா ஒருவருக்கும் தொற்று உறுதியானது. இதைத் தொடா்ந்து, தொற்று பாதித்த பகுதிகளில் வட்டார மருத்துவ அலுவலா் சு.அனிபிரிமின் ஆலோசனைப்படி சுகாதாரப் பணியாளா்கள் கிருமிநாசினி தெளித்தனா். மக்களுக்கு கபசுர குடிநீா், நோய் எதிா்ப்பு மருந்துகள் வழங்கப்பட்டன.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT