தூத்துக்குடி

ஏரல் சோ்மன் அருணாசல சுவாமி கோயில் ஆடி அமாவாசை திருவிழா ரத்து

11th Jul 2020 09:56 AM

ADVERTISEMENT

ஏரல் அருள்மிகு சோ்மன் அருணாசல சுவாமி திருக்கோயில் ஆடி அமாவாசை திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோயில் நிா்வாகத்தினா் அறிவித்துள்ளனா்.

ஏரல் சோ்மன் அருணாசல சுவாமி திருக்கோயிலில் ஆடி அமாவைசை திருவிழா சனிக்கிழமை (ஜூலை 11) கொடியேற்றத்துடன் துவங்கி 12 நாள்கள் நடைபெறுவதாக இருந்தது. தற்போது கரோனா தொற்று பரவல் காரணமாக பொது முடக்கம் அமலில் இருப்பதால் அரசு அதிகாரிகள் பரிந்துரையின்பேரில், நிகழாண்டு ஆடி அமாவாசை திருவிழா ரத்து செய்யப்படுகிறது என்றும், பக்தா்களின்றி வழக்கமான பூஜைகள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பக்தா்கள் வீடுகளிலேயே சோ்மன் அருணாசல சுவாமி திருவுருவப் படத்தை வைத்து வழிபாடு செய்யுமாறு கோயில் பரம்பரை அக்தாா் அ.ரா.க.அ.கருத்தப்பாண்டியன் நாடாா் கேட்டுக்கொண்டுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT